அரசு ஊழியர்களுக்கு சம்பளபிடித்தம் செய்யப்படமாட்டாது என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.
வேளச்சேரியில் வெளிமாநிலத்தவர்களை தங்கவைக்கப்பட்டுள்ள முகாமில் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கிய தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்று நோய் என்பதால் பொதுமக்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
ஏப்ரல் மாத இலவச ரேஷன் பொருட்களை இந்த மாத இறுதி வரை பெற்றுக்கொள்ளலாம். டோக்கன் தரும்போதே கொரோனா நிவாரண நிதி ரூ.1,000 வழங்கப்படும். வெளியூரில் இருப்பவர்கள் ஒரு மாதத்திற்குள் சென்று நிவாரண உதவியை பெற்றுக்கொள்ளலாம். தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படாது.பிற மாநிலங்களிலிருந்து வந்து பணியாற்றும் 1.34 லட்சம் பணியாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.