பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸாக ரூ 1000 -ரூ 3000 வரை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 14ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அரசு துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கமாக போனஸ் கொடுக்கப்படும். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பை அரசு இன்று வெளியிட்டது.
அந்த அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு அனைத்து அரசு பணியாளர்களுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக மிகை ஊதியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் தமிழக அரசுப் பணியில் உள்ள சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு ரூபாய் 1000 முதல் 3000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் ரூபாய் 500 முதல் 2000 வரை ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.