சத்தியமங்கலம் அருகே குடும்ப கட்டுப்பாடு செய்த ஒரு பெண் மீண்டும் கர்ப்பம் ஆனதால் நஷ்ட ஈடு வழங்க முறையிட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த செண்பக புதூரை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மனைவி வைஜெயந்தி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இருப்பினும் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது, அவர் 5 மாத கர்ப்பமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் மனைவி ஆபரேஷன் செய்த அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டன. அறுவை சிகிச்சை செய்தும் கரு உண்டானது எப்படி? மருத்துவமனையிலேயே இது போன்ற கோளாறுகள் நடந்தால் என்ன செய்வது? ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் மூன்றாவது குழந்தையை வளர்ப்பதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் இதுபோன்ற எதிர்பாராத விபத்துகள் நடப்பது உண்டு என்றும், ஜெயந்தி முறையிட்டால் 30 ஆயிரம் நஷ்டஈடு அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.