Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மது அருந்திவிட்டு தகராறு செய்த அரசு மருத்துவமனை ஊழியர்…..!!

மணப்பாறை அரசு மருத்துவமனை ஊழியர் மது அருந்திவிட்டு கலாட்டா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செயல்பட்டு வரும் அரசு  தலைமை மருத்துவமனையில்  மருந்து மாத்திரை கொடுக்கும் ஊழியர் மது அருந்திவிட்டு போதையில் அங்குள்ள பொதுமக்களிடம் கலாட்டா செய்த வீடியோ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர் செய்த இந்த கலாட்டா சம்பவம் விடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

இவர் மது போதையில் தகராறு செய்யும் சம்பவம் அங்கே வந்திருந்த பயணிகளை முகம் சுளிக்க வைத்ததையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் மற்றும்  பொதுமக்கள் குடிகார ஊழியரை அப்புறப்படுத்தினர். அரசு மருத்துவமனை பணியாளர் மது அருந்திவிட்டு கலாட்டா செய்ததை தொடர்ந்து அங்கே சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |