தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி நியமனத்தை மு க ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை கலைப்பதற்கு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் படுகாயம் அடைந்தவரின் குடும்பத்தினருக்கும் மதுரையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
குடும்ப உறுப்பினர்களின் கல்வி தகுதிக்கு ஏற்றார்போல் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை மு க ஸ்டாலின் இன்று வழங்கினார். ஆடைகளே பெற்றுக்கொண்ட அவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி, அமைச்சர்கள் ஐ பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.