Categories
வேலைவாய்ப்பு

“தமிழக கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர்” … 320 பணியிடம் அறிவிப்பு … கடைசிநாள்: பிப்ரவரி 26 ..!!

தமிழக கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு 320 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படும், கீழ்க்காணும் தலைமை கூட்டுறவு சங்கங்கள்- வங்கிகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்த பணியிடம் : 320

பணியிடம் : தமிழ்நாடு

சென்னை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கு 203 இடங்கள்.

நகர கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்டவற்றில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிகளுக்கு 117 இடங்களும் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 1-1-2019 அன்ற 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித் தகுதி:

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். ராணுவத்தில் பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்:

விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணமாக ரூ. 250 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு இந்த கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. கட்டண விலக்கு பெறுபவர்கள் அதற்குரிய சான்றுகளை இணைக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் 200 வினாக்களுடன் 170 மதிப்பெண்களுக்கு நடைபெறும். சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் பதிவு செய்யலாம். அப்போது புகைப்படம், கையொப்பம் மற்றும் அவசியமான சான்றுகள் குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். தவறான தகவல்களுடன் விண்ணப்பிப்பவர்கள் நிராகரிக்கப்படுவதுடன், அடுத்த தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க தகுதியவற்றவாராக அறிவிக்கப்படுவார்.

விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் வருகிற பிப்ரவரி 26-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tncoopsrb.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

Categories

Tech |