ஆக்கிரமிக்கப்பட்ட 60 சென்ட் நிலத்தை அரசுக்கு சொந்தமான நிலம் என நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான 60 சென்ட் இடம் நொய்யல் வீதியில் அமைந்துள்ளது. இந்த இடத்தை அப்பகுதியில் வசிக்கும் ஒரு நபர் கடந்த 18 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்த வழக்கானது திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடமானது அரசுக்கு சொந்தமானது என உத்தரவிட்டுள்ளார்.
இதனை அடுத்து வருவாய் துறை அதிகாரிகள் கலெக்டர் விஜய கார்த்திகேயன் உத்தரவின்படி சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று அந்த நிலத்தை அளவீடு செய்துள்ளனர். அப்போது காலியாக இருந்த 40 சென்ட் அளவு உள்ள இடத்தை சுற்றி கல்லை நட்டு அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். மேலும் அரசுக்கு சொந்தமாக உள்ள இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து 8 கோடி மதிப்புள்ள 40 சென்ட் நிலம் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 20 சென்ட் நிலமும் விரைவில் மீட்கப்படும் என்று அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.