பெல்ஜியம் அரசு இந்தியாவின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்பவர்களுக்கு பயண அனுமதி வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெல்ஜியம் இந்தியாவின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு பயண அனுமதியளித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 15-ஆவது நாடாகும். மேலும் கிரீஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, லாட்வியா, ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்வீடன், பின்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்லோவேனியா, பல்கேரியா, எஸ்டோனியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தியாவில் புனேயில் உள்ள சீரம் இந்திய நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகாவும் சேர்ந்து கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியான ‘கோவிஷீல்டை’ தயார் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு மிகவும் உதவும் வகையில் பெல்ஜியம் அரசு கோவிஷீல்டு தடுப்பூசியை ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் பெல்ஜியம் அரசு நேபாளம், மாலத்தீவுகள், வங்காளதேசம், இலங்கை, பூட்டான் உள்ளிட்ட நாடுகளும் கோவிஷீல்ட் தடுப்பூசியை சார்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.