ஏர் இந்தியா விமான நிறுவனத்தை முழுவதுமாக விற்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடுமையான இழப்பை சந்தித்து வருவதால் நீண்ட காலமாக அதனை விற்க இந்திய அரசு முடிவு செய்தது. எனவே ஏர் இந்தியாவை வாங்க பல நிறுவனங்களும் ஏலம் கேட்டு முன்மொழிவுகளை அனுப்பியுள்ளனர். மேலும் ஏர் இந்தியா நிறுன ஊழியர்களும் ஏலம் கோரியுள்ளனர். 2018 ஆம் வருடம் முதலே ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
ஆனால் அப்போது இந்த பங்குகளை வாங்க யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் தான் நடத்தி வந்துள்ளது. இதையடுத்து டாடா நிறுவனம் தன்னுடைய பெரும்பாலான பங்குகளை பங்குகளை இந்திய அரசுக்கு விற்ற பிறகு தான் பொதுத்துறை நிறுவனமாக மாறியது.
தற்போது ஏர் இந்தியா நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளதால், அதை விற்று முழுவதுமாக தனியார்மயமாக்க நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. இந்த ஏலத்தில் டாடா குழுமமும், இன்டரப்ஸ் நிறுவனமும் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் 2021 வருடம் ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரங்கள் குறித்து இந்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.