Categories
அரசியல் மாநில செய்திகள்

பணம் பறிக்கும் அம்மா அரசு…. ! எஜமானர் மீது பயந்த அடிமை அரசு ….! விளாசும் கமல்

20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில், நான்காம் கட்ட ஒரேடிங்கை மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுக்கள் அறிவித்து விட்டன. இது குறித்து மத்திய அரசின் அறிவிப்பு வெளியாக இருக்கின்றது. நான்காம் கட்ட ஊரடங்கு அறிவிப்பை பிரதமர் மோடி மக்களிடம் பேசி பேசும்போது வெளியிட்டார். அப்போது அவர் நாட்டின் பொருளாதாரத்தை மறு சீரமைப்பு செய்வதற்கு 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 5 நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை அறிவித்து வருகிறார். இன்று காலை இறுதி கட்டமாக பல்வேறு துறைகளில் தனியாருக்கு அனுமதி என்று பிறப்பித்தார். இந்த அறிவிப்பு குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தேவர் கமல்ஹாசனும் மத்திய அரசு திட்டத்தை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், 20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு.

Categories

Tech |