கொலை வழக்கில் சிறையில் இருந்த குற்றவாளிக்கு சிறுநீரக நோய் ஏற்பட்டதால் தமிழக அரசு பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் பேரறிவாளன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 வருடங்களாக சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் சிறுநீரக நோய் பாதிப்பால் பல மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டும் தீராத காரணத்தினால் அவரின் தாயார் தமிழக அரசிடம் பரோல் வழங்குமாறு மனு அளித்துள்ளார். அதன்பின் மே மாதம் 28-ஆம் தேதி அன்று ஒரு மாத கால அவகாசம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்பின் பரோலில் வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததால் அவரின் தாயார் மீண்டும் அதை நீடிக்குமாறு தமிழக அரசிடம் கேட்டுக் கொண்ட நிலையில் அவருக்கு திரும்பவும் ஒரு மாத காலம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிறுநீரக நோய் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பேரறிவாளனுக்கு அரசு வழங்கிய கால அவகாசம் முடிவடைந்து, பின் சிறைக்கு செல்ல இருந்த போது திரும்பவும் பரோலை நீட்டிக்குமாறு அவரின் தாயார் தமிழக அரசுக்கு மனு அளித்துள்ளார்.
இதன் காரணத்தினால் தமிழக அரசு மீண்டும் கால அவகாசமாக 30 நாள் பரோலை அவருக்கு வழங்கி உத்தரவிட்டுள்ளது. பின்னர் பரோலின் காலம் முடிவடைந்த நிலையில் நான்காவது முறையாகவும் அவருக்கு 30 நாட்கள் அவகாசம் அளித்து நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின் அவர் வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளார். அதற்குப் பிறகு பேரறிவலனுக்கு திரும்பவும் 30 நாட்கள் பரோல் கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புகளுடன் பேரறிவாளன் வீட்டிலேயே இருந்து வருகிறார்.