தமிழகத்தில் வருகிற 7ம் தேதி முதல் சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவும் நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மதுபானங்களின் விலையை ரூ.20 வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி தனது டிவீட்டர் பக்கத்தில் மதுக்கடை திறப்பதற்கு எதிப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியது ; மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதியை வாங்காமல் டாஸ்மாக் கடைகளை திறக்க நினைக்கும் தமிழக அரசு, வாழ்வாதாரமின்றி வாடும் மக்களிடம் இருந்து வருவாயைப் பெற்றுக் கொள்ள நினைக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், அரசின் இம்முடிவு நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும்.
மேலும், தற்போதைய சூழலில் டாஸ்மாக்கை திறப்பதால் குடும்ப வன்முறை அதிகரிக்கும் அபாயத்தையும் அரசு உணராமல் இருக்கிறது. எனவே, டாஸ்மாக்கை திறக்கும் முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும். என கூறியுள்ளார்.
மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதியை வாங்காமல் டாஸ்மாக் கடைகளை திறக்க நினைக்கும் தமிழக அரசு, வாழ்வாதாரமின்றி வாடும் மக்களிடம் இருந்து வருவாயைப் பெற்றுக் கொள்ள நினைக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், அரசின் இம்முடிவு நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும். 1/2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 6, 2020