நீலகிரியில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் குணமாகி வீடு திரும்பியதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த அனைவரும் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பை முடித்துள்ளனா் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
எனவே தற்போது வரை புதிய தொற்று யாருக்கும் இல்லை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒன்பது பேரும் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து நீலகிரி மாவட்டம் 100 சதவீதம் மீண்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.
மேலும் கொரோனா பாதிப்பு இல்லாததால் மே 4ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். தமிழகத்தில் 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கரூர் மற்றும் ஈரோட்டில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டம் கொரோனா இல்லாதா மாவட்டங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.