Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எல்லாத்தையும் விட அதிகமா இருக்கு… மாற்றப்பட்ட கல்லூரி பெயர்… தமிழக அரசின் உத்தரவு…!!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறைக்கு கீழ் மாற்றியதோடு, அதன் பெயரையும் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் மாணவர்கள் படிப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணமானது, அரசு கல்லூரியின் கட்டணத்தை விட  அதிகமாக வசூலிக்கப்படுவதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதார துறைக்கு கீழ் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

அதோடு இந்த மருத்துவ கல்லூரி இனிமேல் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கல்லூரியிலும் மற்ற அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் போலவே குறைவாகவே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |