Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இது என்னோட நிலம்… தனி நபரின் அத்துமீறல்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அரசு நிலங்களை கையகப்படுத்த முயன்ற நபர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை சில நபர்கள் தனக்கு சொந்தம் என உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால் அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் புங்கனூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை பரமசிவன் என்பவர் ஜே.சி.பி எந்திரம் மற்றும் லாரி மூலம் நிலத்தை சமன்படுத்தி தனக்கு சொந்தம் என உரிமை கொண்டாட முயன்றுள்ளார்.

இந்த தகவலை அறிந்த ஆற்காடு தாசில்தாரான காமாட்சி என்பவர் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை நேரில் பார்வையிட்டார். இதனை அடுத்து புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்த நினைத்த பரமசிவனின் மீது தாசில்தார் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரமசிவனே கைது செய்ததோடு, ஜே.சி.பி எந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |