கொரோனா பாதிப்பு பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளை கடினமாக்கவும், மேலும் தளர்வுகளை குறைக்கவும் தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிபுணர்கள், சென்னையில் தண்டையார்பேட்டை, திருவிக நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்களில் கொரோனா அதிகம் உள்ளதை கவனித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பகுதிவாரியாக பரிந்துரைகளை தமிழக அரசுக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதை கவனித்து வருவதாக தெரிவித்தனர். மேலும் அதிகமாக பரிசோதனை செய்வதால் பாதிப்பு எண்ணிக்கை உயரும். ஆனால் உயிரிழப்பை குறைக்க அதிக பரிசோதனை அவசியம் என கூறியுள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது என தெரிவித்துள்ளனர். உச்சத்தை எட்டியுள்ளதால் கொரோனா பாதிப்பு இனி குறைய தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.