Categories
சற்றுமுன்

984னு அரசு சொல்லுது… 2098னு மாநகராட்சி சொல்லுது…. டெல்லியில் கொரோனா இறப்பு எவ்வளவு ?

டெல்லியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எணிக்கையில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 984 என்று டெல்லி மாநில அரசு தெரிவித்திருந்த நிலையில், டெல்லி மாநகராட்சி கொடுத்த தகவலால் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கின்றார்கள். டெல்லி மாநகராட்சியின் அதிகாரம் என்பது துணை நிலை ஆளுநருக்கு கீழ் வரக்கூடியது. மாநகராட்சி சார்பில் தனியாகவும், அரசு சார்பில் தனியாகவும் வேலை செய்வார்கள். எனவே இந்த இரண்டு தரப்பினரும் கொரோனா இறப்பு குறித்து கொடுக்கக்கூடிய புள்ளிவிவரங்கள் அப்படியே முரண்பாடாக இருப்பதனால் தான் தற்போது குழப்பங்கள் எழுந்துள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அதில்,  டெல்லியில் இதுவரை 2098 சடலங்களை கொரோனா வழிமுறைகளை பின்பற்றி நாங்கள் அடக்கம் செய்து இருக்கின்றோம் என்பதை அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படி என்றால் 2098 பேருக்கும் கொரோனா இருந்து இருக்கின்றதா ? என்ற ஒரு சந்தேகம் இருக்கின்றது. ஆனால் அது மாநகராட்சி நிர்வாகம் சரியாக தெரிவைக்கவில்லை. மருத்துவமனைகளிலிருந்து கொடுக்கக்கூடிய குறிப்புகளை வைத்து மட்டும் தான் அவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றி இருக்கிறார்கள்.

Arvind Kejriwal tweets 'happy my son will study with tailor's son ...

இதில், அதிகபட்சமாக தெற்கு மாநகராட்சியில் 1080 சடலங்களும், வடக்கு மாநகராட்சியில் 976  சடலங்களும், கிழக்கு மாநகராட்சியில் 42 சடலங்களும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி தனித்தனியாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த எண்ணிக்கையில் வித்தியாசம் என்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லி அரசாங்கம் தான் இது தொடர்பான விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டி இருக்கிறது.

டெல்லி அரசாங்கம் இதுவரை 984 பேர் மட்டும்தான் கொரோனாவால் இறந்துள்ளார் என்று சொல்லப்பட்ட நிலையில் மாநகராட்சி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரை கொரோனா வழிமுறையை பின்பற்றி அடக்கம் செய்துள்ளோம் என்ற ஒரு தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். இது ஒரு பெரிய வித்தியாசம் தான். இதன் சரியான தகவலை டெல்லி அரசாங்கம் கொடுக்க தவறும் பட்சத்தில் தேசிய அளவிலும் பெரிய பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உருவாகி இருக்கிறது. ஒரு பதற்றமான சூழலை இந்த புள்ளி வித்தியாசம் ஏற்படுத்தி இருக்கிறது. விரைவாக டெல்லி அரசாங்கம் இது சம்பந்தமான விளக்கங்கள் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Categories

Tech |