தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகள் ஜூன் 11ம் தேதி திறக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஜூன் 15ல் பத்தாம் வகுப்பு தொடங்க உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விடுதிகளில் காலை மாலை என இருவேளையும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. விடுதிகளில் தனிமனித இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட நலத்துறை விடுதியிலிருந்து மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளன.
Categories