Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்கள், வரும் 21ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப உத்தரவு: பள்ளிக்கல்வித்துறை!!

அரசு பள்ளி ஆசிரியர்கள், வரும் 21ம் தேதிக்குள் தற்போது பணியாற்றும் மாவட்டத்திற்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” வெளிமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 21ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களும் பணியாற்றும் மாவட்டங்களுக்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் ஆசிரியர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் இருப்பிடத்தை உறுதி செய்யவேண்டும் என்பவை அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு மாணவர்களுக்கு இ-பாஸ் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில் அவர் கூறியதாவது, ” வெளியூரில் உள்ள மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு வர இ-பாஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வந்து விடுதியில் தங்க வைத்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி தேர்வு மையங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தபடுவார்கள் என கூறியிருந்தார். இந்த நிலையில், வெளிமாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |