தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசாங்கம் ஊரடங்கில் சில தளர்வுகளை கொண்டு வந்தது மாநில அரசாங்கங்கள் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. இதையடுத்து பல மாநில அரசாங்கங்கள் மதுக்கடைகளை திறந்து விட்டன. தமிழக அரசும் கூட தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு மதுக்கடைகளை வாங்க செல்கிறார்கள் என்று மதுக்கடைகளை திறந்தது.
டாஸ்மாக் மதுக்கடைகளில் முறையாக சமூகவிலகல் கடைபிடிக்கப்படவில்லை என்பதால் அதனை மூட உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை களை முறையாக கடைபிடிக்காததால் பொதுமுடக்கம் முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது இந்த வழக்கு விசாரணை நடைபெற இருக்கும் நிலையில், தமிழக அரசின் மதுக்கடைக்கு எதிரான மேல்முறையீட்டை பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக ஆளும் அதிமுக கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சிகளும் தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா, மது இல்லை என்பதால் யாரும் இறக்காததால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பூரண மது விலக்கை அமல்படுத்தலாம் என்று வலியுறுத்தியுள்ளார் . மேலும் பூரண மதுவிலக்கு என்ற ஜெயலலிதாவின் இறுதி ஆசையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.