சிபிஐயில் பயிற்சி அளித்து வேலை வாங்கித்தருவதாக இணையதளங்கள் வாயிலாக விளம்பரங்கள் வெளியிட்டு நடக்கும் மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை சிபிஐ எச்சரித்துள்ளது.
சட்டம், சைபர் தரவு, பகுப்பாய்வு, குற்றவியல், மேலாண்மை, பொருளாதாரம், வணிகவியல், உள்ளிட்ட பாடங்களில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் படித்த பட்டதாரிகள் முதுநிலை பட்டதாரிகள் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி திட்டம் ஒன்றை சிபிஐ நடத்தி வருகிறது.
இந்த நிலையில் சிபிஐ பயிற்சி அளித்து வேலையை வாங்கித் தருவதாக இணையதளங்களில் விளம்பரங்கள் வெளியிட்டு மோசடி செய்து பணம் பறிப்பதாக சிபிஐயின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மோசடியில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு உஷார் படுத்தி சிபிஐ சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.