சபரிமலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துவது அரசின் கடமை என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் தென் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளில் கலந்துகொள்ளவரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக இந்து சமய அறநிலையைத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்றார். இந்நிகழ்வில் தென் மாநிலங்களைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் சபரிமலை பாதுகாப்பு குறித்து விளக்கினார். அதில் பக்தர்கள் 6 மணிக்கு மேல் மலைக்கு வரக்கூடாது. பிளாஸ்டிக்கை கொண்டுவரக் கூடாது. பிளாஷ்டிக்கை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னதாக கேரளா சட்டசபையில் பேசிய கேரள முதல்வர் பினராய் விஜயன் சபரிமலையை நிர்வகிக்க தனி சட்டம் கொண்டுவருவது சாத்தியமற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெண்கள் வழிபடுவதை தடுப்பது சட்டத்திற்கு எதிரான செயல். அரசே யாரையும் ஐயப்பன் கோவிலுக்கு வாங்க என்று சொல்லவில்லை.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அனுமதிப்பது அரசின் கடமை. ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வருவது அவர்களின் விருப்பம் , அதை தடிக்க எந்த சட்டத்தையும் கொண்டுவர முடியாது என்று கேரள முதல்வர் தெரிவித்தார்.