Categories
தேசிய செய்திகள்

கேரளா மூணாறு நிலச்சரிவு… நேரில் சென்று ஆறுதல்… கேரள மாநில கவர்னர் மற்றும் முதல்வர்…!!

மூணாறு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மாநில முதல்வர் மற்றும் கவர்னர் ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

கேரள மாநிலம் மூணாறு ராஜமலை பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் கடந்த 7ஆம் தேதி இரவு ஏற்பட்ட இந்த பெரும் நிலச்சரிவில் சுமார் 20 வீடுகள் புதைந்து மண்ணோடு மண்ணாகின. இந்த நிலச்சரிவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80-க்கும் மேலானோர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுடன் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டு வந்தனர். சென்ற ஆறு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட மீட்புப்பணியில் இதுவரை 55 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து நிலச்சரிவால் காணாமல் போனவர்களை மீட்புப்பணி வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் கவர்னர் ஆரிஃப் முகமது கான் இருவரும் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினற்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர். மேலும் மீட்புப்பணி குறித்தும் கேட்டறிந்தனர். கேரள மாநில முதல்வர் அறிவித்த நிவாரணம் பற்றி விமர்சனம் எழுந்ததால், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Categories

Tech |