Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது” அலங்கோலமான ஆட்சி விரைவில் கலைக்கப்படும்…. EX. முதல்வர் எச்சரிக்கை….!!!!

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியானது அதிகரித்ததோடு பணவீக்கம் குறைந்து வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மேடைக்கு மேடை பேசி வருகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியானது 9 சதவீதத்திலிருந்து தற்போது 6 சதவீதமாக குறைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82-ஐ தாண்டி விட்டது. இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 22 கோடியை தாண்டிவிட்டது.

ஊட்டச்சத்து குறைபாடு வளர்ச்சியால் 33 சதவீதம் குழந்தைகள் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அகல பாதாளத்திற்கு சென்று வேலை வாய்ப்பு பிரச்சனையானது தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியும் நிதி அமைச்சரும் பொய்யான பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுகிறார்கள். இதற்கிடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு மாநிலங்களில் இந்தி மொழி திணிப்பை செய்து வருகிறார். மத்திய அரசு பணிகளிலும் ஹிந்தி மொழி பேசினால் மட்டும்தான் வேலை என்கிற கட்டாயத்தை உருவாக்கி மாநில அரசுகளின் மீது ஹிந்தி மொழியை திணிக்கின்றனர்.

ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹிந்தி மொழி திணிப்பு எடுபடாது. நாங்கள் எந்த காலத்திலும் ஹிந்தி மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மக்கள் குறைகளை கேட்பது, நிர்வாக செயல்பாடுகளில் தலையிடுவது போன்ற நீதிமன்ற அவமதிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். பொதுமக்களுக்கு குறைகள் என்றால் பிரச்சனைகள் என்றால் அந்தந்த துறைகளுக்கு தகவல்களை எடுத்துரைத்தும் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டுமே தவிர ஆளுநருக்கு நிர்வாகத்தில் தலையிடுவதற்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது.

நீதிமன்றமும் ஆளுநருக்கு அரசு நிர்வாகத்தில் தலையிடுவதற்கு உரிமை கிடையாது என்றும், மக்களால் தேர்வு செய்யப்பட்டதை அரசு அனுப்பும் போது அதை மத்திய அரசுக்கு அனுப்புவது மட்டும் தான் ஆளுநரின் கடமை என்றும் கூறியுள்ளது. ஏற்கனவே கிரண் பேடியும் ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்டதால்தான் அவர் மீது நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எனவே ஆளுநரும் தொடர்ந்து நிர்வாக செயல்பாட்டில் தலையிட்டால் அவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். மின்துறை தனியார் மையம் ஆவதில் அரசின் நிலைப்பாடு என்ன? 100% பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு எதற்காக விளக்கம் அளிக்கவில்லை. மேலும் இந்த அலங்கோலமான ஆட்சி விரைவில் கலைக்கப்படும் என்று கூறினார்.

Categories

Tech |