Categories
மாநில செய்திகள்

கவர்னர் இல. கணேசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு….. மருத்துவமனையில் அனுமதி….. அதிர்ச்சியில் பாஜக….!!!!

பாஜக கட்சியின் மூத்த தலைவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

பாஜக கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன். இவர் மாநிலங்களவையின் முன்னால் எம்.பி ஆக இருந்துள்ளார். இவர் தமிழக பாஜக கட்சியின் தலைவராகவும், பாஜகவின் தேசிய உறுப்பினர் குழு உள்ளிட்ட பல்வேறு பதவிகளிலும் வகித்து வருகிறார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மணிப்பூர் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது மேற்குவங்க மாநிலத்தின் கவர்னராக இருக்கும்‌ இல. கணேசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தகவல் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |