புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்கள் விற்க துணை நிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. நான்காவது ஊரடங்கை பிறப்பிப்பதற்கு முன்னதாக மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்து வந்தது. குறிப்பாக மாநிலங்களில் மதுபான கடைகளை இயக்கிக் கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து புதுச்சேரியிலும் மதுபான கடைகளை திறப்பதற்கு அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்தது. ஆனால் மதுபான கலால் வரியை செலுத்தாத காரணத்தினால் மதுக்கடைகள் திறப்பதற்கு அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை, இதனால் மதுக்கடைகள் திறக்காமல் இருந்தநிலையில் தற்போது ஆளுநர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மதுக்கடைகளை திறக்க ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் புதுச்சேரியில் மதுபானக் கடை திறப்பதில் இருந்த சிக்கல் தீர்ந்ததுள்ளது.