முதல்வர் பதவிக்கு தகுதி உள்ளவராக இருங்கள் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அம்மாநில கவர்னர் பதிலளித்துள்ளார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு நல்ல அரசியல் தலைவரா என்ற விமர்சனத்திற்கு அப்பால் ஒரு தனி பெண்மணியாக எதிர்க்கட்சிகள் கொடுக்கும் அத்தனை சவால்களையும் சமாளித்து பல இன்னல்களைத் தாண்டி தமிழகத்தில் இரும்பு பெண்மணியாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல் மேற்குவங்கத்தில் பிரச்சினைகளை சமாளித்து சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறார். ஆனாலும் அவர் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து விமர்சனத்திற்கும் ஆளாகி வருகிறார்.
அந்த வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் சிலர் அரசியலமைப்பு சட்டத்தை வைத்திருந்தாலும் அரசுக்கு ஒத்துழைக்காமல் துன்புறுத்துகிறார்கள் என அம்மாநில கவர்னர் ஜக்தீப் தன்காரை மறைமுகமாக சாடியிருந்தார். இதனைப் புரிந்துகொண்ட ஜக்தீப் தன்கார் முதல்வர் மம்தாவின் ஆதாரமற்ற நிலைப்பாட்டிற்கு நான் வருந்துகிறேன். முதலில் நீங்கள் உங்கள் பதவிக்கு தகுதி உடையவராக இருங்கள். நான் அரசியலில் பங்குதாரர் அல்ல என பதிலடி கொடுத்துள்ளார்.