Categories
தேசிய செய்திகள்

வெளியே போக சொன்ன ஆளுநர்.. மன்னிப்பு கேட்க சொல்லி பேரணி… கேரளா ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு…!!

ஊடகங்களுக்கு தடை விதித்த கேரளா ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

கேரள மாநில அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில் ஏற்கனவே  மோதல் வெடித்தது.  இதற்கிடையே கேரள மாநில ஆளுநர் கொச்சியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஒரு சில குறிப்பிட்ட ஊடகங்களுக்கு பேட்டியளிக்க மாட்டேன் என தெரிவித்து,  அவர்களை உடனடியாக வெளியேற கூறியுள்ளார். ஆளுநரின் இந்த செயலுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் கேரள ஆளுநர் ஊடகங்களுக்கு விதித்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள பத்திரிகையாளர் சங்கம் ஆளுநர் மாளிகை நடத்திய பேரணியை மாநில எதிர்க்கட்சி தலைவர் வி.டி சதீசன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ஆளுநர் சில ஊடகங்களை மட்டும் வெளியேற்றிய செயல் குழந்தைத்தனமானது.

மக்களுக்கு தகவல் தெரிவிப்பதில் ஊடகங்களுக்கு அதிகமான பங்கு இருக்கிறது. ஜனநாயகத்தில் ஊடக சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானதாகும். மேலும் ஊடக தடை  என்பது ஜனநாயக இந்தியாவிற்கே அவமானம். ஊடக சுதந்திரம் மறுக்கப்படுகின்ற இடத்தில் ஜனநாயகம் மறுக்கப்படுகிறது என கூறி ஊடகங்களுக்கு தடை விதித்த கேரளா ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |