Categories
தேசிய செய்திகள்

1,10,00,000 லஞ்சம் கேட்ட வட்டாட்சியர்… கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர்…!!

ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் இருந்து ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். 

தெலங்கானா மாநிலம் மல்காஜிகிரி மாவட்டம் கீசரா மண்டலத்தில் நாகராஜ் என்பவர் வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் 28 ஏக்கரில் வீடு கட்டி விற்பனை செய்ய ரியல் எஸ்டேட் நிர்வாகம் அனுமதி வழங்குமாறு கேட்டிருந்தது. இதற்காக வட்டாட்சியர் சுமார் ஒரு கோடி ரூபாய் கேட்டதாக கூறப்பட்டது. அதனால் அதிருப்தி அடைந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார்.

நேற்று மாலை நாகராஜூ தன்னுடைய வீட்டில் அவர் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிய போது அங்கு சென்ற காவல்துறையினர் கையும் களவுமாக வட்டாட்சியரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவருடைய வீட்டில் தொடர்ந்து சோதனை நடைபெறுகிறது. இதற்கு முன்னரும் லஞ்சம் வாங்கிய வழக்கில் வட்டாட்சியர் நாகராஜை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |