Categories
அரசியல் மாநில செய்திகள்

குலைப்பதை, கடிப்பதை வழக்கமாக கொண்டுள்ள கவர்னர்: நாடாளுமன்றத்தில் தெறிக்கவிட்ட DMK …!!

மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, நம்மளும்..  நம்ம மட்டும் இல்லை. எங்கெங்கெல்லாம் பிஜேபி ஆட்சியில் இல்லையோ,  அங்க எல்லாம் ஒரு கவர்னரை போடுறாங்க. அந்த கவர்னர்..  தான் ஒரு கவர்னர் அப்படிங்கறது மறந்துட்டு, எதோ கட்சியில் இருக்கக்கூடிய மாதிரி… இல்லனா ஆர்எஸ்எஸ்ஸில் இருக்கக்கூடியவர்கள் மாதிரி அவர்கள் மேடைக்கு முழங்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலை, 1967-ல் நம்முடைய பேராசிரியர்கள் அவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்த பொழுது கூட இருந்திருக்கிறது. அதனால் தான் அவர் அப்பொழுதே பதிவு செய்திருக்கிறார் நாடாளுமன்றத்தில்…. இந்த கவர்னர் பதவிங்கிறது, மத்தியிலே இருக்கக்கூடிய இந்த ஒன்றிய அரசாங்கம் ”இந்திய ஒன்றியம்” என்பதை மறந்துவிட்டு இங்கே இருக்கக்கூடியவர்களை ஒடுக்குவதற்காக… அவர்கள் கட்சி சார்பிலே, சில பேரைக் கொண்டு வந்து கவர்னராக நியமிக்கிறார்கள்.

அவர்கள்  குலைப்பதை,  கடிப்பதை தன்னுடைய வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்  என்று  நம்முடைய பேராசிரியர் அவர்கள் நாடாளுமன்றத்திலே பதிவு செய்திருக்கிறார்கள். கவர்னர் என்பது மக்களுக்கான பிரதிநிதி அல்ல, மக்களுடைய பிரதிநிதிகளுக்கு எதிராக பணியாற்றிக் கொண்டிருக்க கூடியவர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்,  இதை கண்டிக்கிறேன் என்று பேசியுள்ளார்.

Categories

Tech |