இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழக கவர்னர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்பாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இறைவன் மேல் அதீக நம்பிக்கை வைத்திருந்த ஒருவர், இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற தன்னை தியாகம் செய்ய தயாராக இருந்த நிகழ்வை குறிக்கும் நாளாக இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் சர்வ வல்லமை உள்ள இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப, ஒருவர் தனது செயல்களையும், எண்ணங்களையும் முழுமையாக அர்ப்பணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த விழா கொண்டாடப்படுகிறது.இந்த பெருமைமிக்க திருநாளில் சகிப்புத்தன்மை, நல்ல மனப்பான்மை, இரக்கம் ஆகியவற்றின் மூலம் தெய்வீக நற்பண்புகளை உயர்த்தி நிலை நிறுத்த வேண்டும் என்று உறுதி ஏற்போம் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.