Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ.க்கு மணி மண்டபம் கட்டப்படும்” பேரவையில் ஆளுநர் உரை …!!

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்தி வருகின்றார்.

தமிழக  15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றி வருகின்றார். அப்போது அவர் பேசுகையில் , தமிழக அரசு திறமையான நிதி மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

சேலம் தலைவாசலில் ரூ.1000 கோடியில் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.மத வேறுபாடின்றி தமிழக மக்கள் அனைவரின் நலனும் பாதுகாக்கப்படும். ஜெயலலிதா நினைவு மண்டபம் விரைவில் கட்டி முடிக்கப்படும். காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்புத் திட்டம் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் உரை நிகழ்த்தி வருகின்றார்.

Categories

Tech |