Categories
மாநில செய்திகள்

சென்னை வந்தது “கோவிஷீல்டு”… விரைவில் தொடங்குகிறது பரிசோதனை…!!

கொரோனாவிற்கான தடுப்புமருந்து புனேவில் இருந்து சென்னைக்கு வந்துள்ளது.

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தும் இன்னும் அமலுக்கு வராத நிலையில் தற்போது அதுகுறித்த ஒரு நற்செய்தி வந்துள்ளது. அதாவது புனேவில் இருந்து சென்னைக்கு கோவிஷீல்டு தடுப்புமருந்து வந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்துப் பார்க்க, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிசோதனையானது, நாடு முழுவதும் 1600 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 150 பேருக்கும், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் 150 பேருக்கும் செலுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் இந்த கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனை அடுத்த வாரம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தடுப்பு மருந்து பரிசோதனையில் ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படுகிறதா?என்பது குறித்த ஆராய்ச்சி, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது.

Categories

Tech |