புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இயற்கை பேரிடர்களை கையாளும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று மாலை புயல் உருவாக வாய்ப்பு உள்ள நிலையில் இந்த அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு வழங்கியுள்ளது. அவை யாதெனில்,
* புயல் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
* பேரிடர் காலங்களில் ஏற்படும் தேவைகளை பூர்த்தி செய்ய வியூகங்கள் வகுக்க அறிவுறுத்தல்.
* சீல் வைக்கப்பட்ட இடங்களில் புயல் எச்சரிக்கை இருந்தால் மக்கள் அனைவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும்.
* பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான கொரோனா தடுப்பு உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* மீட்பு பணிகளின் போது சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்.
* பருவமழையை எதிர்கொள்ள முறையான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
* மாவட்ட வாரியாக பேரிடர் மேலாண்மை திட்டம் அமைக்கப்பட வேண்டும்.
* நிவாரண முகாம்களை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
* பருவ மழை மற்றும் புயல் எச்சரிக்கையை எதிர்கொள்ளும் அதே தருணத்தில் கொரோனா தொற்று ஏற்படாத வண்ணமும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.