ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு இழுபறி ஏற்பட்டு வருவதால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒன்றாக டெல்லி_க்கு அளித்துள்ளது காங்கிரஸ் கட்சி.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 21_ஆம் தேதி நடைப்பெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநில தேர்தல் முடிவு_வும் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அங்கு பெரும்பான்மைக்கு 46 தொகுதிகள் பெற வேண்டும் என்ற நிலையில் அங்கு எந்த கட்சிக்கும் பெருபான்மை கிடைக்காமல் இழுபறி நீடித்து வருகின்றது. ஆளும் கட்சியான பாஜக கூட்டணி 39 தொகுதிகளிலும் , காங்கிரஸ் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.ஆட்சியமைக்க 46 தொகுதிகள் கைப்பற்ற வேண்டும் என்பதால் எந்த கட்சியும் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதில் , பாஜக 38 தொகுதிகளிலும் , காங்கிரஸ் 34 தொகுதிகளிலும் , ஜனநாயக ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும் , இந்திய நேஷனல் லோக் தள் கட்சி 1 தொகுதிகளிலும் , சுயேச்சை 1 தொகுதிகளிலும் , ஹரியானா லோகித் ஜனதா கட்சி 1 தொகுதிகளிலும் ஜனநாயக ஜனதா கட்சி 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். இதனால் கடும் இழுப்பறியில் இருக்கும் காங்கிரஸ் , பாஜக சுயேச்சை மற்ற கட்சிகளை பேசி வருகின்றனர்.
கர்நாடக மாநில அரசியலில் செய்ததை போல பாஜக தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விடுவார்கள் என்ற நிலையில் வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒரே இடத்தில் இருக்க வைக்கும் வகையில் டெல்லி காங்கிரஸ் கட்சி அலுவலகம் வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே ஹரியானா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தமிழக கூவத்தூர் பார்முல்லா அரங்கேற இருக்கிறது.