அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
காப்பீட்டு திட்டம் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் 2021ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு ஊழியர்கள், ஓய்வூதியக்காரர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்கள் இனி காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.