Categories
Uncategorized மாநில செய்திகள்

வெளி மாநில தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர தமிழக அரசுக்கு உத்தரவு!

வெளி மாநில தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்
மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழர்கள் நாடு திரும்பி முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள 400 தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஏற்கனவே மே 16ம் தேதி நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில்,

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க மாநில அரசுகள் தவறி விட்டது, வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை ஊடகங்களில் பார்த்தால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது என நீதிபதிகள் வேதனை தெரிவித்திருந்தனர். ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை தொழிலாளர்கள் பிற மாநிலங்களில் சிக்கியுள்ளனர்? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் என்ன உதவிகள் வழங்கியுள்ளன?,

இதுவரை எத்தனை தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்? என்பது குறித்து பதிலளிக்க உத்தரவித்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அனுமதி கோரியுள்ளது. மேலும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தொழிலாளர்கள் தவிப்பதாக மனுதாரர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |