Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்….. இன்று முதல் அனுமதி….. வெளியான அதிரடி உத்தரவு….!!

நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளை மன உளைச்சலலிருந்து பாதுகாக்க மத்திய அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஒருபுறம் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தரமான சிகிச்சை என்பது நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 14 நாட்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால், அவர்களுக்கு மன உளைச்சல் என்பது ஏற்படுகிறது.

பலர் தங்களது குடும்ப உறுப்பினர்களை காண முடியவில்லை என்ற ஏக்கத்தில் மிகவும் வருத்தத்துடன் காணப்படுகின்றனர். கொரோனா நோய் பாதிக்கப்பட்ட காலத்தில் இது போன்ற மன வருத்தத்தில் இருப்பது நோயாளிகளுக்கு ஆபத்து என்பதால், அவர்களை தைரியப்படுத்தவும் அவர்களுக்கு மன உளைச்சல் வராமல் தடுப்பதற்கும் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர்களது குடும்பத்துடன் பேச அனுமதிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

நோயாளிகளின் மன அழுத்தம் குறைவதற்காகவே இந்த பிரத்யேக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்மார்ட்போன், டேப்லெட் உள்ளிட்ட சாதனங்கள் மூலம் வீட்டில் உள்ளவர்களிடம் நோயாளிகள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை இன்று முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |