பள்ளிகள், கல்லூரிகள் கட்டணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு என்பது தற்போது அமலில் உள்ள நிலையில் பல தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற குறுந்செய்தி, போன் அழிப்பு வருவதாக பல்வேறு புகார்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டு இருந்தனர்.
தமிழகத்தின் முதலமைச்சர் கூட இதுமாதிரி கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு குறுஞ்செய்தி மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ பள்ளி, கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பான முக்கியமான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதில் எந்த தனியார் கல்லூரியிலோ, பள்ளியிலோ அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது. மாணவர்களையோ, பெற்றோர்களையோ கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.