இந்தியர்கள் யாரும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு முன்பதிவு செய்ய வேண்டாம் என்று ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
உலக பணக்காரர்களில் ஒருவரும், அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் “ஸ்டார்லிங்க்” என்ற திட்டத்தினை இயக்கி வருகிறார். ஆனால் எலான் மஸ்க்கின் இந்த ஸ்டார்லிங்க் சேவைக்கு இந்தியாவுடைய அனுமதி பெறாததால் ஒன்றிய அரசு இந்தியர்கள் யாரும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழி இணையதள சேவைக்கு முன்பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது அடுத்த ஆண்டிற்குள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தத் திட்டத்திற்கான விளம்பர பணிகளையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயல்படுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைக்கு உரிமை பெறாததால் இதுவரை ஒன்றிய அரசும் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன் காரணமாக ஒன்றிய அரசு இந்தியர்கள் யாரும் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு முன் பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதலில் உரிய அனுமதியை பெறுமாறும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.