தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் கௌதம் வாசுதேவ் மேனன் ஒருவர். இவரை சினிமா திரையுலகால் ஜீ.வி.எம் என அழைக்கப்படுவார். இவர் கேரளாவில் இருக்கும் பாலக்காடு பகுதியில் பொட்டகாடு கிராமத்தில் 1973 ல் பிப்ரவரி 25ஆம் தேதி பிறந்தார். இவர் திருச்சியில் உள்ள மூகாம்பிகை இஞ்சினியரிங் காலேஜில் 1993-ஆம் வருடம் படித்திருக்கிறார். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்டதால் படிக்கும்போதே ஷார்ட் பிலிம் ஆட் பிலிம் போன்றவற்றை எழுத தொடங்கியுள்ளார்.
மேலும் கல்லூரியில் உடனிருந்த நண்பர்கள் உடைய பழக்கவழக்கங்கள் கேரக்டர் ஆகியவற்றின் மூலம் தான் மின்னலே திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் தயாரிக்கும் படங்கள் அனைத்தும் அவருடைய வாழ்க்கையுடன் ஒன்றிப்போன கதையை மட்டுமே அவர் தயாரிப்பார். இதை அவரே பல நேர்காணலில் கூறியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் காதல் திரைப்படங்கள் என்று சொன்னால் கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களை நினைவுக்கு வரும். அப்படி வரும் படங்களில் ஒன்றுதான் விண்ணைத்தாண்டி வருவாயா.
இது இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த படம். அதாவது 1980களில் பிறந்தவர்களுக்கு மௌனராகம் படம் எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவுக்கு இந்த காலகட்ட இளைஞர்களுக்கு விண்ணைத்தாண்டி வருவாயா படம் பிடிக்கும். ஸ்கிரீன் ரைடர், பிலிம் ப்ரொடியூசர், பிலிம் ஆக்டர், பிளேபேக் சிங்கர் இப்படி தமிழ் திரையுலகில் பல அவதாரம் எடுத்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவருடைய படங்கள் அனைத்துமே செமி ஆட்டோ பயோகிராபி படமாகவே இருக்கும். மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் அனைத்திலும் கௌதம் வாசுதேவ் மேனன் தன்னோட வாழ்க்கையில் வரும் கதாபாத்திரத்தின் கதையை சேர்த்திருப்பர்.
மேலும் இவர் திரில்லர் படம் எடுப்பதிலும் மிகவும் சிறந்தவர். காக்க காக்க, என்னை அறிந்தால், வேட்டையாடு விளையாடு, அச்சம் என்பது மடமையடா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். 2013ஆம் ஆண்டு தங்கமீன்கள் படத்தையும் தயாரித்துள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் தன்னுடைய சொந்தத் தயாரிப்பிலும் பல படங்களை கொடுத்துள்ளார். இவருடைய படத்தில் ஒரு நடிகர் நடிகை இருக்கிறார் என்றால் உடனே ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாகிவிடும். ஏனென்றால் இவருடைய படத்தின் கதை என்ன, டைட்டில் என்ன போன்ற கேள்விகள் வரிசையாக எழுந்துவிடும்.
மேலும் இவர் தமிழில் மட்டும் இல்லை தெலுங்கு பாலிவுட்டிலும் பல படங்கள் எடுத்துள்ளார். மேலும் தமிழில் வந்த படங்கள் பலவற்றை தெலுங்கு பாலிவுட்டில் ரீமேக் பண்ணியுள்ளார். இன்றைய திரை உலகில் டாப் 10 தயாரிப்பாளர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறுகளை வெப் சீரியஸாகவும் எடுத்திருக்கிறார். தமிழ் திரையுலகில் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன்.