ஜி பி முத்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
டிக் டாக் மூலமாக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் ஜிபி முத்து. தனது பேச்சு மூலம் பலரது எதிர்மறையான கருத்துக்களை இவர் பெற்றாலும் யூடியூப் சேனல், டிவி நிகழ்ச்சி என பிசியாக இருக்கும் இவருக்கு அதிக வருமானமும் கிடைக்கிறது.
இவர் தற்போது யுவன் இயக்கத்தில் சன்னி லியோன் நடிக்கும் ‘ஓ மை கோஸ்ட் ‘ படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார் என்றும் விரைவில் இப்படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜி பி முத்து அடுத்து நடித்து வரும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது பிக் பாஸ் சீசன் 4யில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இவர் தற்போது அறிமுக இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையில் நடிகர் வெற்றிக்கு ஜோடியான பம்பர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜி பி முத்து பம்பர் திரைப்படத்தில் துப்பாக்கி பாண்டியன் என்னும் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் கேரளா லாட்டரி மையமாக வைத்து திரில்லர் படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.