செல்போன் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்பதால் பிக்பாஸுக்கு செல்லவில்லை என்று ஜி பி முத்து கூறியுள்ளார்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க செய்த பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து தனது ஐந்தாவது சீசனை தொடங்க இருக்கிறது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பற்றிய தகவல்கள் செய்திகளில் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவ்வகையில் டிக் டோக் பிரபலமான ஜிபி முத்துவின் பெயரும் வெளியானது.
இதனால் அவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போவது பற்றி கேட்டபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சி போகாததற்கு காரணம் தன்னால் செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்று கூறியதோடு குடும்பத்தினரைப் பிரிந்து இருக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.