Categories
பல்சுவை

GPay, PhonePe, PayTM யூஸ் பண்றீங்களா?…. அப்போ இத செய்யுங்க…. இல்லனா ஆபத்து தான்…..!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.இதனால் மக்களின் நேரமும் அலைச்சலும் மிச்சம் ஆகிறது.அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

தற்போது மக்கள் எந்த பொருள் வாங்கினாலும் கூகுள் பே, போன் பே மற்றும் பேடி எம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பரிவர்த்தனை செய்வது அதிகரித்துள்ளது. அதனைப் போலவே யு பி ஐ மூலம் மோசடிகளும் அதிகரித்துள்ளன. இதனை தடுக்க உபியை பரிவர்த்தனையின் போது முதலில் யுபிஐ பின், மொபைல் ஓடிபி, இமெயில் ஓடிபி யை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். யு பி ஐ யின் லிமிட்டை செட் செய்து கொள்வது, இன்டர்நேஷனல் டிராக்சசன் தேர்வு டிசேபிள் செய்வதன் மூலம் பணம் திருடப்படுவதை தடுக்க முடியும்.

 

Categories

Tech |