கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும் போது முறைகேடுகளை தடுக்க அவசியம் இவற்றை பின்பற்ற வேண்டும். இணைய மோசடிகளுக்கு இரையாகாமல் இருக்க பயனர்கள் UPI பேமெண்ட் பாதுகாப்பு குறிப்புகள் மற்றும் தந்திரங்களை அறிந்திருந்தால் பாதுகாப்பு. சீரற்ற இணைப்புகளைக் கிளிக் செய்யாமல் இருப்பது, மோசடி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது, PIN எண், கடவுச்சொல் போன்றவைகளை வழங்குவது போன்ற சில எளிய வழிமுறைகள் அடங்கும்.
அதன்படி யாரிடமும் உங்கள் யு பி ஐ பின் நம்பரை பகிரக்கூடாது. போனில் ஸ்கிரீன் லாக் செட் செய்யவும்.பணம் செலுத்தும் போது எதிர் முனையில் இருப்பவரின் யு பி ஐ டி ஐடியை சரி பார்க்கவும். ஒன்றுக்கு மேற்பட்ட யு பி ஐ ஆப்களை பயன்படுத்தக் கூடாது. மேலும் வெரிஃபைடு செய்யப்படாத லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.