Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

“படிப்படியாக குறையும் வெட்பநிலை” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக குறைய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை கால வெயில் வாட்டி வதக்கி எடுக்கும் சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் தினமும் வெப்பத்தின் அளவு , வெப்பத்தின் தாக்கம் என தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் , மேற்கு திசைக் காற்றின் சாதகமான சூழல் காரணமாக வெப்பநிலை படி படியாக குறைய வாய்ப்பு இருப்பதாகவும் ,  வெப்ப அலை மற்றும் அனல் காற்று வீச வாய்ப்பு இல்லை என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு  உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு பெய்யலாம். நீலகிரி,கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மேற்கு உள் மாவட்டங்களிலும் , தேனி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |