Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பட்டதாரி கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை…ஊராட்சி தலைவரும் தொடர்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் முன்பகையால் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் மேற்குவலசு அருந்ததியர் தெருவில் சரவணன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். பட்டதாரியான இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அணைப்பாளையம் புறவழி சாலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ராசிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சரவணனின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து சரவணனின் பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி சரவணன் கொலையில் தொடர்புடைய தொட்டியவலசு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன்(45), மூக்குத்திபாளையம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கோபிசங்கர்(36) மற்றும் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த செல்போன் உரிமையாளர் பிரவீன் குமார் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் முன்பகை காரணமாக சரவணனை கொலை செய்தது தெரியவந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றும் ஒருவரை போலீசார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரனை(22) காவல்துறையினர் கைது செய்து திருச்செங்கோடு சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |