தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மிதிற்கு கௌரவ வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்தை வழங்கி மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்(எம்சிசி) கௌரவித்து.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கிரேம் ஸ்மித் எம்சிசியின் கௌரவ வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்துக்கு தேர்வாகியுள்ளார்.இதுகுறித்து எம்சிசி தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட்டில் அவர் செய்த சாதனைகளுக்காக தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித்திற்கு எம்சிசியின் கௌரவ வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்த்தை வழங்குகிறோம் என்று பதிவிட்டுள்ளது.
யார் இந்த கிரேம் ஸ்மித்:
- தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரேம் ஸ்மித் அந்த அணியில் இளம் வயதில் கேப்டனாக பொறுப்பெற்ற முதல் நபர் என்ற சாதனைக்கு சொந்தகாரர்.
- 2003ஆம் ஆண்டில் அவர் மேற்கொண்ட முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்களை பதிவு செய்து சாதனை படைத்தார்.
- லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 259 ரன்கள் எடுத்ததன் மூலம், லார்ட்ஸ் மைதானத்தில் தனிநபராக அதிக ரன்களை அடித்த டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார்.
- இதுவரை 117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்மித், 27 சதங்கள், 38 அரைசதங்கள் உட்பட 9,265 ரன்களை எடுத்துள்ளார். இவரின் டெஸ்ட் சராசரியானது 48.2 ஆகும்.
- ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரையில் 197 போட்டிகளில் பங்கேற்று 10 சதங்கள், 47 அரைசதங்களுடன் 6,989 ரன்களை விளாசியுள்ளார்.
MCC has today announced the election of @OfficialCSA
legend @GraemeSmith49 as an Honorary Life Member of the Club.— Lord's Cricket Ground (@HomeOfCricket) October 22, 2019