ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 12 லட்சம் ரூபாய்க்கு தானியங்கள் விற்பனை செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் சாலையில் அமைந்திருக்கும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளம் 15 முட்டைகள், உளுந்து 7 முட்டைகள், எள் 600 மூட்டைகள் , பச்சபயிர், கேழ்வரகு, மணிலா 10 முட்டைகள், வரகு உள்ளிட்ட 633 தானிய மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் 100 கிலோ எடை கொண்டுள்ள மக்காச்சோளம் ஒரு மூட்டை அதிக விலையாக 1633 ரூபாய்க்கும் குறைந்த விலையாக 1,509 ரூபாய்க்கும் விலை விதித்துள்ளனர்.
இதனை அடுத்து 100 கிலோ எடை கொண்டுள்ள உளுந்து ஒரு மூட்டை அதிக விலையாக 4999 ரூபாய்க்கும் குறைந்த விலை 2919 ரூபாய்கும், 80 கிலோ எடை கொண்டுள்ள ஒரு முட்டை எள் அதிக விலையாக 8491 ரூபாய்க்கும் குறைந்த விலையாக 5559 ரூபாய்கும் விற்பனையாகியுள்ளது. இவ்வாறாக மொத்தம் 12 லட்ச ரூபாய்க்கு தானியங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த தானிய முட்டைகளை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராசிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வசிக்கும் விற்பனையாளர்கள் வாங்கி சென்றுள்ளனர்.