Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இவர் ரொம்ப நேர்மையான அதிகாரி…. கேக் வெட்டி கொண்டாடிய பொதுமக்கள்…. மகிழ்ச்சியில் கிராம நிர்வாக அதிகாரி….!!

கிராம நிர்வாக அதிகாரியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய கிராம மக்களின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காமராஜர்புரம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் 20 ஆண்டுகள் கடற்படையில் வேலை பார்த்து ஒய்வு பெற்றுள்ளார். தற்போது இவர் வல்லம் புதூர் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் கடந்த 6 ஆண்டுகளாக மக்களுக்கு தன்னால் இயன்ற அனைத்து நன்மைகளையும் செய்து அவர்களது மனதில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு நிவேதா என்ற மகளும், அரவிந்த் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் செந்தில்குமார், நேர்மையான வழியில் சான்றிதழ்களை உரிய நேரத்தில் அனைவருக்கும் வழங்கி வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஏழை, எளிய மக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருள்களை தனது சொந்த செலவில் வழங்கியுள்ளார். இதனால் அவரின் சேவை மனப்பான்மையை பாராட்டும் வகையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் செந்தில்குமாரின் பிறந்தநாளை கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் மற்றும் கும்மிப் பாடல்கள் பாடியும் கொண்டாடினர். இதுகுறித்து மாதவர் கோவில் பகுதியில் வசிக்கும் லெனின் என்பவர் கூறும்போது எங்களுடைய கிராமத்தில் பல அதிகாரிகள் பணியாற்றியுள்ளனர்.

ஆனால் இவரைப் போன்ற சேவை மனப்பான்மை உள்ள அதிகாரியை நாங்கள் பார்த்தது கிடையாது என செந்தில்குமாரை பாராட்டி கூறியுள்ளார். இவரின் நேர்மையை சிறப்பிக்கும் வகையில் அவரின் பிறந்தநாளில் மரக்கன்றுகளை நட்டும், பொதுமக்கள் நினைவு பரிசை வழங்கியும் அவரை மகிழ்ச்சிப்படுத்தினர்.  மேலும் இது குறித்து செந்தில்குமார் கூறும்போது கிராம மக்கள் எனது பிறந்தநாளை கொண்டாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் இந்த சேவையை நான் தொடர்ந்து செய்து வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |